Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மைப் பற்றி கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி

சமூக சேவைகள் அமைச்சர் அவர்களின் செய்தி

எதிர்காலத் தொலைநோக்கு எனும்  மஹிந்த சிந்தனையின் கீழ்  இவ் அமைச்சு, முதியோர்கள் (இச்சனத்தொகையில் 9.6%), அங்கவீனமுற்ற நபர்கள் (இச்சனத்தொகையில் 10%) மற்றும் தனியொருவரினைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள் (வீட்டுத் தலைவர்களில் 23%) போன்ற சமுதாயத்தினர்களுக்கு தொண்டாற்றுவதற்கு கட்டளையிட்டிருக்கின்றது.

சமூக சேவைகள் அமைச்சர் என்ற வகையில் எனது தொலைநோக்காவது. மஹிந்த சிந்தனையினை விளைதிறன் மற்றும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் சம அந்தஸ்தினை அவர்களுக்கு வழங்கி அவர்களினை கௌரவத்துடனும் மற்றும் பெருமையுடனும் வாழ வைப்பதே ஆகும்.

மேற்குறிப்பிட்ட பயனாளிகளுக்கு எமது அமைச்சுடன் அதன் கீழ்வருகின்ற நிறுவனங்களினால் உதவி வழங்கப்படுகின்றது.  அவையாவன, சமூக சேவைகள் திணைக்களம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகம் போன்றன.  மேலும்  தேசிய உளவளத்துணைப் பிரிவு மற்றும் சமுதாய மட்டத்திலான புனருத்தாபன நிகழ்ச்சித் திட்டத்தின் உதவியும்  இப்பாதிக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக எமக்கு கிடைக்கப்படுகின்றது.

சமூக சேவைகள் அமைச்சானது, ஆய்வு மற்றும் அபிவிருத்தியினை முன்நோக்கி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினை மேம்படுத்தி பலப்படுத்தி உள்ளது. மேலும்… …………………………… பட்ட நிகழ்ச்சியினையும் முன்னேற்றியுள்ளது.

மஹிந்த சிந்தனை – எதிர்காலத் தொலைநோக்கின் மூலம் எனது அமைச்சு, இச்சமுதாயத்தில் ஊறுவிளைவிக்கப்பட்ட குழுக்கள் பயன்பெறும் பொருட்டு பல முக்கிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.  மஹிந்த சிந்தனைக் கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு அங்கவீனமுற்ற குடும்பங்களுக்கு ரூபா. 3000/- கொடுப்பனவினால் பாரியளவில் அங்கவீனமுற்ற குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.  உதவி உபகரணங்கள் வழங்குதல். அங்கவீனமுற்ற நபர்களின் வீடுகளினை நிர்மாணிப்பதற்கான மானியங்கள், மருந்தினை (ஔடதத்தினை) கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படுகின்ற பணம் போன்றன வறிய மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள பிற சேவைகளாகும்.

முதியோர்களுக்குப் பயனளிக்கும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.  அவையாவன, புதிய அடையாள அட்டையினை வழங்குதல், கிராமிய மட்ட முதியோர் சங்கங்களுக்கு பண நன்கொடைகளை வழங்குதல், மருந்தினைக் கொள்வனவு செய்வதற்கு உதவுதல் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்காக பரந்துபட்ட வழிகாட்டல்களை வழங்கக்கூடிய குடும்பக் கொள்கையினை உருவாக்குவதற்கும் உதவிகளை வழங்கியமையாகும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியுடன் சமூக சேவைகள் அமைச்சினால் ஆரம்பிக்கப்படுகின்ற புதிய  இணையத்தளம், இலங்கையிலுள்ள பொதுமக்கள் பயன் பெறும் பொருட்டு தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கு தொடர்புபட்ட கொள்கை வழிகாட்டல்களின் பிரகாரம், இப்புதிய இணையத்தளமானது விசேடமாக அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பான தகவல் பலவற்றினை உள்ளடக்கும் என இவ்வமைச்சு உறுதியளிக்கின்றது.  மேலும் “தடையற்ற- சமுதாயத்தினை அடிப்படையாகக் கொண்ட உரிமைகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் பல பயன்களை அவர்கள் பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

எனது அமைச்சினால் வியாபிக்கப்பட்ட அனைத்து சேவைகளுடன் தொடர்புடைய தகவல் மூலம் சமூகத்தில் ஊறுவிளைவிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பிரமாண்டமான பயன்களை நல்கும். இதன் மூலம் அவர்களைத் தேசிய அபிவிருத்தியில் பங்குதாரர்களாக ஆக்குவதற்கு முடியும்.

பீலிக்ஸ் பெரேரா, பா.உ.
சமூக சேவைகள் அமைச்சர்,
இலங்கை.

 

காப்புரிமை © 2014 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News