சமூக சேவைகள் செயற்பாடுகள், இச்சமுதாயத்திலுள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு பரந்த சூழலினை உருவாக்குவதற்கும் மற்றும் தேசிய அபிவிருத்தியில் அவர்களைப் பங்குதாரர்களாக ஆக்குவதனை நோக்காகக் கொண்டும் அமுல்படுத்தப்படுகின்றது.
அதிகரிக்கும் முதியோர் சனத்தொகையினைக் கருத்திற் கொண்டு முதியோர்களின் வாழ்க்கைத் தரங்களினை உயர்த்துதல், அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளைப் பாதுகாத்தலுடன் அவர்களைப் பராமரித்தல் மேலும் இச்சமுதாயத்தில் கஷ்டநிலைமையின் கீழுள்ள பிரிவினர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் போன்றன சமூக சேவைகள் அமைச்சின் பிரதான விடயங்களாக உள்ளன.
தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், மக்களுக்குத் தேவையான தகவலைப் பெறுவதற்கு ஒரு துரித முறைமையினை இவ்வரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது மிக இலகுவாக தேவையான சேவைகளை நிறைவேற்றுவதற்கு இயலுமாக உள்ளது.
பல சமூக சேவைகள் செயற்பாடுகள், மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ பீலிக்ஸ் பெரேரா அவர்களின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் தகவலினை விரைவாக வழங்குவதனை நோக்காகக் கொண்டு ஒரு புதிய இணையத்தளத்தினை ஆரம்பிப்பதன் மூலம் காலத்தின் தேவையினை சமூக சேவைகள் அமைச்சு நிறைவேற்றியுள்ளது எனக் குறிப்பிடுவதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
சந்திரசிறி சூரியாராச்சி,
சமூக சேவைகள் பிரதியமைச்சர்.





