Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு நிறுவனங்கள் NSPD

அங்கவீனமுற்றவர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும்

குறிக்கோள்கள்

அங்கவீனமுற்ற நபர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், முன்னேற்றுதல் மற்றும் பாதுகாத்தலுக்கான 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டமூலத்தின் கீழ் விதிக்கப்பட்ட சட்டமூலங்களை அமுல்படுத்துதல்.

தொழிற்பாடுகளும் மற்றும் செயற்பாடுகளும்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள், அங்கவீனமுற்றோரின் முன்னேற்றம், உயர்ச்சி மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டமூலத்தின் பிரகாரம், அங்கவீனமுற்றோருக்கான தேசிய சபை ஒன்றினை இவ்வமைச்சில் ஸ்தாபித்துள்ளார்.

அதன்படி இத்தேசிய சபையினால் பின்வரும் விடயங்கள் பற்றி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

  • அங்கவீனமுற்றோரின் நலன்களை உயர்த்துதல்.
  • வலுவிழக்கச் செய்யும் பிரதான காரணங்களை வருமுன் காத்தலும், கட்டுப்படுத்தலும்.
  • அங்கவீனமுற்றோர் பற்றிய மிகத் துல்லியமாக புள்ளி விபரங்களைப் பேணுதல்.
  • அங்கவீனமுற்றோரின் புனர்வாழ்வுக்கும். உயர்ச்சிக்கும் நடவடிக்கை எடுத்தல்.
  • அங்கவீனமுற்றோருக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தலும் அவற்றுக்கு ஒத்தாசை வழங்குதலும்.
  • அங்கவீனமுற்றோரின் தேவைகளை நிறைவேற்றுதல்.
  • அங்கவீனமுற்றோருக்கான சரியானதொரு பௌதிகச் சூழலைத் தயார் செய்வதற்கு நிகழ்ச்சித் திட்டங்களையும். கொள்கைகளையும் உருவாக்குதலும். வழிகாட்டுதலும்.
  • அங்கவீனமுற்றோரின் தேவைகள். நிலவரங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்வதனை அதிகப்படுத்தல்.

அங்கவீனமுற்ற நபர்களுக்காக சேவைகளை வழங்குவதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்.

  1. அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய சபை
  2. அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகம்
  3. சமூக சேவைகள் திணைக்களம்
  4. மாகாண சமூக சேவைகள் திணைக்களம்
  5. பிரதேச செயலகங்கள்

சேவைகள் தொடர்பான விபரங்களைப் பெற இங்கே சொடுக்கவும்

 

காப்புரிமை © 2014 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News