பணிக்கூற்று
“முதியோர்களின் நலன்களை மேம்படுத்துதல், உரிமைகளைப் பாதுகாத்தல் என்பனவற்றினூடாக அவர்கள் கௌரவமாகவும், கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ வழி அமைத்தல், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் முதியோர்களுக்கான பங்களிப்பின் தேவையினை உணர்த்துதல் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தலே எமது பணிக்கூற்றாகும்”
குறிக்கோள்கள்
- முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்.
- முதியோர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதுடன், அதற்கான தீர்வுகளை முன்வைத்தல்.
- முதியோர்களின் அறிவு, திறமை மற்றும் அனுபவம் போன்றவற்றினை பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் சமூக அபிவிருத்திக்குப் பயன்படுத்துதல்.
- சமூகத்தின் சிறந்த பிரஜையாகத் திகழ்வதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல்.
- குறைந்த வருமானமுடைய முதியோர்களின நலன்கருதி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
- முதியோர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்தல்
செயற்பாடுகள்:-
முதியோர்களுக்கான தேசிய சபையும் மற்றும் செயலகமும் 2000 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க முதியோர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் சட்டமூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரிக்கும் ஒரு நாடாக இலங்கை விளங்குகின்றது. எனவே, இச்செயலகமானது எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள முதியோர் சனத்தொகையினைக் கருத்திற்கொண்டும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதனை நோக்காகக் கொண்டும் நிறுவப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி நிரம்பிய ஆரோக்கியமான முதுமை
உலக முதியோர் சனத்தொகை அதிகரிப்புடன் இலங்கையில் முதியோர் சனத்தொகை துரிதகதியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2000 ஆம் ஆண்டில் 9.3 % ஆக இருந்த முதியோர் சனத்தொகையானது 2050 ஆம் ஆண்டளவில் 27.6% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. முதியோர்கள் மிகுந்த அறிவு மற்றும் அனுபவம் நிறைந்தவர்களாக உள்ளனர். எமது குறிக்கோள் அவர்களுக்கான சூழலினை உருவாக்குவதாகும். அபிவிருத்தி முன்னெடுப்பின் பகுதியாக அவர்களின் அறிவு மற்றும் திறமைகளை பரிமாறுவதனனூடாக நாட்டின் அபிவிருத்திக்காக முதியோர் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதனை நோக்காகக் கொண்டு நாட்டின் நலன்புரியினை உறுதிப்படுத்துதல். இச் செயலகமானது நாடுபூராகவுமுள்ள முதியோர் சங்கங்களுக்கு வலையைமப்பினை கட்டியெழுப்பியுள்ளது.
எமது குறிக்கோள், முதியோர்களினை தனிமையிலிருந்து விடுவித்தல், நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் திடமான பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல். மேலும் ஐக்கிய நாடுகளின் ஐந்து கொள்கைகளினை (சுதந்திரம், பங்களிப்பு, பராமரிப்பு, கௌரவம் மற்றும் சுய நிறைவு) உறுதிப்படுத்தல்.





