குறிக்கோள் :
“அங்கவீனமுற்ற அனைவரும் அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்கும், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் இயலுமாகும் வரையில் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல், அவர்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றுக்காக அவர்களைச் சமூகத்தில் ஒன்று சேர்க்கும் நோக்கில் தற்போதுள்ள சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுள் வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்”.
பின்னணி :
அங்கவீனமுற்றவர்களும், சமூகத்தில் சம அந்தஸ்துள்ள அங்கத்தவர்களாவதுடன், சமுதாயத்தினுள் அவர்களுக்கு சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்குப் பக்கபலமாக அமையும் பொதுக்கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, நுழைவு வசதி, நலன்புரி மற்றும் வேறு எவ்வித தேவை ஒன்றாயினும் நிலவுகின்ற கட்டமைப்பினுள் ஏனையவர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்று சமமான விதத்தில் வழங்கப்பட வேண்டும் என்னும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகவாழ்வுக்கான உரிமையாகும். சமூக சேவைகள் அமைச்சானது இன்று நாடு முழுவதிலும் 25 மாவட்டங்களில் தெரிவு செய்து கொண்ட 331 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ்வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது. அங்கவீனமுற்ற நபர்களுக்கான சமுதாய மட்டத்திலான புனர்வாழ்வு வேலைத்திட்டம் இச்சக வாழ்வுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் இவ்வேலைத்திட்டம் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் முதன்மைபெற்ற வேலைத்திட்டமொன்றாக இனங்கண்டு கொள்ள முடியும்.
அங்கவீனமுற்ற அனைவரின் மூலமும் அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்கும், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் இயலுமாகும் வரையில் புனர்வாழ்வு செய்தல், அவர்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அவர்களை சமூகத்துடன் ஒன்றச் செய்யும் நோக்கில் சமுதாய அபிவிருத்தியினுள் கருவூலமுற்ற செயற்பாடே சமுதாய மட்டத்திலான புனர்வாழ்வு எனக் கருத்துக் கூறலாம்.
செயற்பாடுகள் :
- அனைத்து மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் மாவட்டக் குழுவினை ஆரம்பித்து, இலங்கையின் அங்கவீனம் தொடர்பான தேசியக் கொள்கையினை செயற்படுத்துவதற்கான அறிவினைப் புதுப்பித்தல்.
- அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், போன்ற உத்தியோகத்தர்களுக்கு அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அறிக்கையிடுதல் மற்றும் குறிப்பிடுதலுக்காக சீ.பீ.ஆர். நிகழ்ச்சித் திட்டங்களின் புதிய போக்கு தொடர்பான வேலையரங்கினை நடாத்துதல்.
- பிரதேச மட்டங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான ஒன்றுதிரட்டும் வேலையரங்கினை நடாத்துதல்.
- பிரதேச செயலகப் பிரிவு மட்டங்களில் கிராமியத் தலைவர்களுக்கான வேலையரங்கினை நடாத்துதல்.
- அங்கவீனமுற்ற நபர்களினை உள்ளடக்கி சுய உதவி அமைப்பினை நிறுவுதலும் மற்றும் அவர்களினை வலுவூட்டுதலும்.
- அங்கவீனமுற்ற நபர்களின் பெற்றோர் அமைப்பினை நிறுவுதலும் மற்றும் அறிவூட்டுதலும்.
- தன்னார்வத் தொண்டு பயிற்சி வேலையரங்கினை நடாத்துதல்.
- மாகாண உதவி உத்தியோகத்தர்களுக்கான வெளிக்கள பயிற்சி வேலையரங்கும் மற்றும் மாதாந்த முன்னேற்ற அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளலும், மீளாய்வும்.
- இனங்காணப்பட்டுள்ள அங்கவீனமுற்ற நபர்களுக்கான வீட்டு மட்டத்தில் புனருத்தாபனம்.
- அங்கவீனமுற்ற நபர்களுக்கு உட்பிரவேசிப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.





