சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ பீலிக்ஸ் பெரேரா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் தேசத்திற்கு மகுடத் தேசிய வைபவத்தினை நினைவு கூரும் பொருட்டு அனுராதபுர மாவட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான விசேட வீடமைப்பு உதவி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தலா ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கு இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் பெறுமதி ரூபா. 250,000/- ஆகும். மொத்தமாக 44 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கண்காட்சியில் அவற்றைப் பூரணப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.





