மனோதத்துவ உளவளத்துணை நிகழ்ச்சித் திட்டமொன்று, கிரிவத்துடுவ, ஹோமாகம/விஜேவர்த்தன மத்திய கல்லூரியில் 2012 மார்ச் 28 ஆந் திகதி தேசிய உளவளத்துணை நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 438 நபர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இந் நிகழ்ச்சித் திட்டமானது தமிழ் மொழி ஊடகத்திலும் 2012 மார்ச் 29 ஆந் திகதி அரனாயக தலகஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட 562 நபர்கள் வெகு ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளனர். மேலும் விஷேடமாக குடும்ப உளவளத்துணை நிகழ்ச்சித் திட்டமொன்று அவர்களுக்காக ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு மேலதிகமாக பிரத்தியேக உளவளத்துணை சிகிச்சைகளானவை பங்குபற்றுபவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடாத்தப்பட்டுள்ளன. உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு.
• மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான மனோதத்துவ வழிகாட்டல்.
• ஞாபக சக்தி, கற்றல் நுட்பங்கள் மற்றும் திறன் விருத்தி.
• மாணவர்களின் பிரச்சினைகளை இனங்காணுவதற்கான மனோதத்துவ
அணுகு முறைகள்.
• வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கான மனவழுத்த முகாமைத்துவம்.
• சிறுவர் கல்விக்கான குடும்பச் சூழலின் முக்கியத்துவம்
• மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்வுக்கான சிறந்த உள சுகாதார பழக்கவழக்கங்கள்
போன்றன இந் நிகழ்ச்சித் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாகவிருந்தன






