Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு செய்திகளும் சம்பவங்களும் News Head Line அங்கவீனமுற்ற நபர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான துரிதகதி நிகழ்ச்சித் திட்டம்

அங்கவீனமுற்ற நபர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான துரிதகதி நிகழ்ச்சித் திட்டம்

சமூக  சேவைகள்  அமைச்சினால்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  அங்கவீனமுற்ற  நபர்களுக்கான வீடுகளை  நிர்மாணிப்பதற்கான துரிதகதி நிகழ்ச்சித் திட்டம்,  கௌரவ  பீலிக்ஸ் பெரேரா,  சமூக சேவைகள் அமைச்சரின்  ஆதரவுடனும் மற்றும் கெளரவ  சந்திரசிறி  சூரியாராச்சி,  சமூக சேவைகள்  பிரதியமைச்சர், கௌரவ  பிரியங்கர ஜயரத்ன,  வான் துறை  அமைச்சர், கௌரவ.  நியோமல் பெரேரா,  வெளிநாட்டு  விவகார  பிரதியமைச்சர் மற்றும்  புத்தளம்  மாவட்டத்தின்  பாராளுமன்ற  உறுப்பினர்கள்  போன்ற மேன்மை தங்கியவர்ளின்  பங்குபற்றுதலுடன்  புத்தளம்  மாவட்டத்தில்  2012 யூலை 13 ஆந் திகதி வைபவ ரீதியில்  அங்குரார்ப்பணம் செய்யப்படும்.

மேலும்  அடிக்கல்  நாட்டும் வைபவம்   சிலாபம். மெதவத்தையில்  நடாத்தப்படவுள்ளது.  மற்றும்    அனைத்துப் பயனாளிகளுக்குமான  விபர  அறிக்கைகள்  வழங்குகின்ற வைபவம்  புத்தளம்  நகர  மண்டபத்தில்  மு.ப.  10.30  மணிக்கு  நடாத்தப்படும்.

புத்தளம்  மாவட்டத்தில்  80 வீடுகளை  நிர்மாணிப்பதற்கு  எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன்  ஒவ்வொரு  வீட்டுக்குமாக ரூபா. இரண்டரை  இலட்சம்  வழங்கப்படும்.

 

காப்புரிமை © 2013 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News