தென் மாகாணத்திலுள்ள உளவளத்துணையாளர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தெவினுவரவிலுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தில் 2012, யூலை 12 ஆந் திகதி நடாத்தப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பத்து உளவளத்துணையாளர்கள் பங்குபற்றியுள்ளனர். அவர்கள் 2012 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றத்தினை முன் வைத்துள்ளனர். தேசிய உளவளத்துணை நிலையத்தின் பணிப்பாளரான திரு. எம்.எச்.எம். ஸமீல் அவர்கள் இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மேலும் அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் தொழிலினை உயர்த்துதலின் தேவைப்பாடுகள் மற்றும் அவர்களின் சேவையினை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.






