Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு செய்திகளும் சம்பவங்களும்
செய்திகளும் சம்பவங்களும்

தேசிய உளவளத்துணை தினம் – 2012

சமூக  சேவைகள்   அமைச்சர்  கௌரவ. பீலிக்ஸ் பெரேரா மற்றும் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி அவர்களின்  ஆதரவுடனும் மற்றும்  இவ்வமைச்சின் செயலாளரான திருமதி.  இமெல்டா  சுகுமார்  அவர்களின்  பங்குபற்றுதலுடனும்  தேசிய உளவளத்துணை  தினமானது  2012  ஒக்டோபர் 15 ஆந் திகதி   இலங்கை  மன்றக் கல்லூரியில் மு.ப. 8.00 மணி – பி.ப. 4.00 மணி வரை நடாத்தப்படும்.

 

விசேட தொழில் வழிகாட்டிப் பட்டறை

உள சுகாதார  அபிவிருத்திக்காக  அர்ப்பணிக்கப்புடன்   செயற்படும் சர்வதேச சமுதாயத்தினால்  அடையாளங்காணப்பட்டவாறு    உள  நிலைமை,  உளச்சோர்வாக  அறியப்பட்டு  இந்த  ஆபத்து  தொடர்பாக  நாம் அனைவரும்  எச்சரிக்கப்பட்டுள்ளோம்.   இது  சமூகப் பொருளாதார  மாற்றங்கள்,  அழுத்தங்கள்  மற்றும்  பல்வேறு  சிக்கல்களுக்கு  காரணமாக அமையும்.   அதன் காரணமாக  சர்வதேச உள சுகாதார தினத்திற்காக  (ஒக்டோபர் 10 ) இவ்வருடத்திற்கு   ஐக்கிய நாடுகளினால்   அடையாளங்காணப்பட்ட தொனிப்பொருள் “உளச்சோர்வு; உலகெங்கும் பரவியுள்ள நெருக்கடி” என்பதேயாகும்.  இவ்வகையான  தொனிப்பொருளில் எமது  உளவளத்துணை  தினம்,  சர்வதேச  உள சுகாதார  தினத்தினை ஒட்டி  “உளச்சோர்வு தேசிய நெருக்கடியொன்றாக இல்லாதிருப்பதற்கான  ஆலோசனை”” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.  இதனைக் கருத்திற்கொண்டு  தேசிய  அபிவிருத்தி  இலக்குகள் அதே போல பிரத்தியேக  மற்றும்  சமூகப்  பிரச்சினைகள் தொழில் வழிகாட்டல் மற்றும்  ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம் போன்ற  சவால்களை எதிர்நோக்கி “கிராமத்தினை எழுச்சி பெறச் செய்வதற்கான  இளைஞர் சக்தி” எனப் பெயரிடப்பட்டு  மகரகமவிலுள்ள  இலங்கை   இளைஞர்  மன்றத்தில்  500  இளைஞர்களின்  பங்குபற்றுதலுடன்  2012  ஒக்டோபர்  05 ஆந்  திகதி  கொண்டாடப்பட்டது.

இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி  அமைச்சின் மேற்பார்வைக்குரிய  பாராளுமன்ற உறுபிப்பினர்   திரு. மோகன் லால் கிறேறோ அவர்கள்  இந்நிகழ்வில்  பிரதம  விருந்தினராகக்  கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சித்திட்டம்,   இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி  அமைச்சு மற்றும்  இலங்கை இளைஞர் மன்றம் போன்றவற்றின்  ஒத்துழைப்புடன் சமூக சேவைகள்  அமைச்சினல்  ஒழுங்கமைக்கப்பட்டது.

அனுவபமிக்க  மனோதத்துவ  உளவியலாளர்கள், திரு. சுசில்  பிரேமரத்ன மற்றும்  திருமதி.  காந்தி கெட்டிகொட,  நிபுணர்கள் கலாநிதி (திருமதி.) மஞ்சுள தனன்சூரிய மற்றும் திரு. இந்திரஜித் லியனகே போன்றோர்கள்    ஆலோசனையின்  அறிமுகம், தொழில் ஆலோசனை மற்றும்  வழிகாட்டல், நேர் மனப்பாங்கு மற்றும் சுய விருத்திக்கான  ஆக்கச் சிந்தனை மற்றும் கெட்ட பழக்கத்திற்கு  அடிமையாதல்/பாலியல் உறவு மற்றும் உள்ளக உறவு தொடர்பாக இந்நிகழ்வில்  போனைகளை  வழங்கியிருந்தனர்.

சுய விருத்தி மற்றும்   ஆர்வமுள்ள   ஆலோசனை  மனோதத்துவ  நிகழ்ச்சியினைக் கொண்ட இந் நிகழ்வு,  கேளிக்கை  அம்சங்களையும்    மற்றும் செயற்பாடுகளையும்  உள்ளடக்கியிருந்தமை  குறிப்பிடத்தக்க  அம்சமாகும்.

 

தேசிய முதியோர் தினம் 2012

சர்வதேச  முதியோர் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேசிய  வைபவம்,  2012 ஒக்டோபர் 01 ஆந் திகதியன்று கொழும்பு 07 இல் உள்ள  இலங்கை  மன்றக் கல்லூரியில்,  “நோய் நொடியற்ற  சிறந்த ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள்” என்ற  தொனிப்பொருளின் கீழ்  நடாத்தப்பட்டது.   சமூக சேவைகள்  அமைச்சர் கௌரவ  பீலிக்ஸ் பெரேரா  அவர்கள்  இந்நிகழ்வின்   பிரதம விருந்தினராகக்  கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இலங்கை கெல்ப்பேச் மற்றும்  சர்வதேச கெல்ப்பேச்சின்  அனுசரணையுடன்  இந் நிகழ்வு  நடாத்தப்பட்டது.

மேன்மை தங்கிய  சனாதிபதி  அவர்களின்  வழிகாட்டியின்  கீழ்,  உகந்த சூழலொன்றை  உருவாக்கி முதியோர்களின்  வாழ்கைத்தரங்களை  மேம்படுத்துவதற்கும் மற்றும்  முதியோர்களின்  பங்களிப்பினை  பாராட்டுவதற்கும்    பல்வேறு  நிகழ்ச்சித் திட்டங்களை  சமூக சேவைகள்  அமைச்சு  ஆரம்பித்துள்ளது  என கௌரவ  பீலிக்ஸ் பெரேரா அவர்கள்  இந்நிகழ்வில்  உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  குடும்ப  அலகுடன் முதியோர்களின்   ஆரோக்கியத்தினை மேம்படுத்துதல் மற்றும்  கவனத்திற்கொள்வதே அரசின் நோக்காகும்.  மகிந்த சிந்தனைப் பிரகடனத்தின் பிரேரணைகளை  ஒட்டி,   70 வயதிற்கு  மேற்பட்ட  முதியோர்களுக்கு   மாதாந்தக் கொடுப்பனவுத்  தொகையினை ரூபா.  1000/-   வாக  உயர்த்துவதே புதிய  ஆரம்பமாகவிருந்தது  என  மேலும்  குறிப்பிட்டார்.

முறையே  ஒவ்வொரு மாவட்டத்திற்குமான  சிறந்த  முதியோர்  சங்கத்திற்கான  விருதுகளும் கௌரவ  அமைச்சர்  அவர்களினால்  வழங்கப்பட்டது.  முதியோர்கள்  இந்நிகழ்வில்  பல்வேறு  கண்கவர்  கலாசார செயற்பாடுகளையும் செய்து காட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்க  விசேட  அம்சமாகும்.

 

மாற்றுத்திறன்களைக் கொண்ட நபர்களுக்கான வசதிகளை அதிகரித்தல்.

மகிந்த சிந்தனையின்  கீழ்   அங்கவீனமுற்ற நபர்கள்  பல வசதிகளினைப் பெற்று வருகின்றனர்  என  சமூக சேவைகள்  திணைக்களத்தின்  பணிப்பாளரான கேமச்சந்ர  கேவகே  அவர்கள்  குறிப்பிட்டார்.

மேலும்  அங்கவீனமுற்ற  சமுதாயத்தில்  3% மானோர்களுக்கு  அரச  நிறுவனங்களிலும்  மற்றும்  வாழ்க்கைத் தொழிற்பயிற்சி  நிலையங்களிலும்  தொழில்வாய்ப்புக்கள்  வழங்கப்படுகின்றன.   மேலும்  பிரத்தியேகச்  சுகாதாரப்  பராமரிப்புச் செயற்பாடுகளும்  அவர்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றது.

தகவல்  திணைக்களத்தில்   செவ்வாய்க்கிழமையன்று  (25 ஆந் திகதி)  நடாத்தப்பட்ட  ஊடக  மகாநாட்டில்  உரையாற்றியவேளையில்  திரு. கேவகே  அவர்கள்  இக்கருத்துக்களினை வெளியிட்டார்.  இலங்கை  விழிப்புலனற்றவர்களுக்கான  சம்மேளனம்,  மனித  உரிமைகள்   ஆணைக்குழு மற்றும்  சமூக சேவைகள் திணைக்களத்தினால் இவ்  ஊடக  மகாநாடு  ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது.

மேலும்  பல்வேறு  மாற்றுத்திறன்களைக் கொண்ட  பிரஜைகள்  அனுதாபத்தினை  எதிர்பார்க்காது  சமுதாயத்திலிருந்து நேர்முகமான பார்வை  மற்றும்  சம அந்தஸ்தினையும் எதிர்பார்த்து நிற்பதாக  அவர் குறிப்பிட்டார்.  ஒவ்வொரு  பிரதேச செயலகத்திலிருந்தும்  34  பேர்கள்  வீதம்  பல்வேறு  மாற்றுத்திறன்களைக் கொண்ட  11,216  பேர்களுக்கு      ரூபா.  3,000/-   வீதம் மாதாந்தக் கொடுப்பனவு  வழங்கப்படுகின்றது என  மேலும் சுட்டிக் காட்டினார், மேலும்   இவ் எண்ணிக்கையையும்  மற்றும்   தொகையையும்   முறையே 16,600 பேர்கள் மற்றும்  ரூபா.  5,000/-  வரை  அடுத்த வருடத்திலிருந்து அதிகரிப்பதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு, வீடுகளினை  நிர்மாணிப்பதற்கு ரூபா.  250,000/-, சுகாதாரப்  பராமரிப்பு  உதவிக்காக  ரூபா.  20,000/0 மற்றும்  சுய தொழிலினை மேற்கொள்வதற்காக ரூபா.  25,000/- வையும்  பல்வேறு  திறன்களைக் கொண்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கு  வழங்கி வருகின்றது என  அவர் தனது  உரையில், மேலும்  குறிப்பிட்டிருந்தார்.


இவ்வாறான  நபர்களின் அனைத்து  உரிமைகளையும்  பாதுகாப்பதற்கு  பாராளுமன்றத்தில்  சட்டவரைபு ஒன்று முன்வைக்கப்படுவதற்கு  ஏற்கனவே  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது   என மேலும்  அவர் குறிப்பிட்டார். 2002  ஆம் ஆண்டின்  முடிவில்   முன்னெடுக்கப்பட்ட  ஆய்வினை  அடிப்படையாகக்  கொண்டு,  பல்வேறு  மாற்றுத்திறன்ளைக் கொண்ட  ஏறக்குறைய 274,000  பேர்கள்  உள்ளனர்  என   வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  அவர்களில்  72,000 பேர்கள் விழிப்புலனற்ற  நபர்களாவர்.

இலங்கை விழிப்புலனற்றவர்களுக்கான  சம்மேளனத்தின்  பிரதிநிதிகளும் இந் நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

 


Page 5 of 17

காப்புரிமை © 2013 சமூக சேவைகள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
Social News